பள்ளிப் பேருந்தின் மேற்கூரையில் மாணவர்களை அமர வைத்து, ஓட்டுநர் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வகையில், குண்டும் குழியுமான சாலையில் பேருந்து அதிவேகமாகச் செல்வதும், அதன் மேற்கூரையில் ஏராளமான மாணவர்கள் ஆபத்தான முறையில் அமர்ந்திருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

போக்குவரத்து விதிகளை முற்றிலுமாக மீறி, மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள இந்தச் சம்பவத்தைக் கண்டு இணையவாசிகள் கொதிப்படைந்துள்ளனர். இதுபோன்ற பொறுப்பற்ற ஓட்டுநர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இத்தகைய விதிமீறல்களைக் கண்காணிக்கத் தவறுவது ஏன் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.