சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் சமீர் ரிஸ்வி குறித்து ஒரு நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான ரிஸ்வி, சிறுவயது முதலே தனது தந்தையிடம் இருந்து மிகவும் கடுமையான பயிற்சியைப் பெற்றுள்ளார்.
கிரிக்கெட் விளையாடும்போது ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விளாச வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் கட்டளையாக இருந்துள்ளது. ஒருவேளை பந்தை ‘டிபெண்ட் செய்து தடுத்தாடினால், மைதானத்திலேயே வைத்து அடிப்பேன் என்று தந்தை மிரட்டியதாக ரிஸ்வி பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
🚨 Kartik Sharma Six hitting machine of CSK 💛🚨
“My father would threaten to hit me if I defended the balls”
” Chahar sir used to make me practice defending the ball during the day and my father used to make me practice hitting sixes at night”. pic.twitter.com/gHgW0J2pEk
— VIKAS (@Vikas662005) December 23, 2025
“>
மேலும் தந்தையின் இந்த ‘அதிரடி’ அணுகுமுறைதான் ரிஸ்வியை ஒரு சிறந்த ஃபினிஷராக மாற்றியுள்ளது. ஆரம்பத்தில் இந்த கண்டிப்பு பயத்தை ஏற்படுத்தினாலும், அதுவே காலப்போக்கில் எதிரணி பந்துவீச்சாளர்களைக் கண்டு அஞ்சாத மனப்பக்குவத்தை அவருக்குக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் 2024 ஐபிஎல் ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட ரிஸ்வி, தனது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் தற்போது ஐபிஎல் அரங்கில் ஒரு அதிரடி வீரராக உருவெடுத்து வருகிறார்.
