வாழ்க்கை எந்த நேரத்திலும் தலைகீழாக மாறும் என்பதற்கு உதாரணமாக, கோவிட் பெருந்தொற்றால் ₹14 கோடியை இழந்து, இன்று ராபிடோ  ஓட்டுநராக மாறியுள்ள ஒரு தொழிலதிபரின் கதை சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுளளது.

ஒரு காலத்தில் வசதியான வாழ்க்கையை வாழ்ந்த இவர், பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பெரும் வணிக இழப்பால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்துள்ளார்.”வாழ்க்கை மிகவும் அநீதியானது” என்று வேதனையுடன் கூறும் அவர், தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி பைக் டாக்சி ஓட்டும் தொழிலைத் தொடங்கியுள்ளார்.

இந்த உருக்கமான சம்பவம், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு குறைவானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிய ஒருவர், இன்று அன்றாடத் தேவைகளுக்காகச் சாலையில் போராடும் நிலை பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இருப்பினும், இக்கட்டான சூழலில் துவண்டு விடாமல், கௌரவம் பார்க்காமல் உழைக்க முன்வந்த அவரது மனதிடத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன. சோதனைக் காலத்திலும் மனம் தளராது போராடும் இவரது கதை, வீழ்ச்சியில் இருப்பவர்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அமைந்துள்ளது.