சென்னை நத்தம் ஆண்கள் கலை கல்லூரியில் குமாரசாமி என்பவர் வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கே.ஜெயவாணி தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். ஜெயவாணி கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு எழும்பூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பிச்சைக்காரன் ஒருவர் அவரை நோக்கி ஓடிவந்து பிளேடால் முகத்தை சரமாரியாக தாக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ஜெயராணி முகத்தை மூடிக்கொண்டு சம்பவ இடத்தை விட்டு ஓடி உள்ளார்.

ஆனாலும் குமாரசாமி விடாமல் துரத்தி சென்று மேலும் பலமுறை சராமரியாக பிளேடால் தாக்கியுள்ளார். பின்னர் ஜெயவாணியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது புகாரின் பேரில் போலீசார் குமாரசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன் மனைவி சக ஊழியருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் இதனால் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் குமாரசாமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து குமாரசாமி மீது கொலை முயற்சி மற்றும் பெண்கள் துன்புறுத்தல் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.