சமூக வலைதளங்களில் அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் பல்வேறு வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், வீட்டின் கதவைத் திறந்த நபருக்கு முன்னே புலி ஒன்று காத்திருந்த திக் திக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது வீட்டின் கதவைத் திறக்க முயன்ற நபர் ஒருவர், லேசாகக் கதவைத் திறந்து வெளியே பார்த்தபோது இருட்டில் 2 கண்கள் மின்னுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Imagine you open your door and you see this… What would you do?😳 pic.twitter.com/Ymw14Ux4SR
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) January 30, 2025
உற்றுப் பார்த்தபோது வாசலில் ஒரு புலி அமர்ந்திருப்பதைக் கண்டு உறைந்துபோன அவர், பதற்றத்துடன் கதவை மீண்டும் மூட முயன்றார். அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாகப் புலி அவர் மீது பாய முயன்றதும், நூலிழையில் அவர் கதவை மூடி உயிர் தப்பியதும் காண்போரை உறைய வைத்துள்ளது.
ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியாகாத நிலையில், இதைப் பார்த்த பலரும் அந்த நபரின் சமயோசித புத்தியைப் பாராட்டுவதோடு இத்தகைய சூழல்களில் வனத்துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
