மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த ஒருவர், தான் அமர்ந்திருந்த இருக்கையின் மீது காலை வைத்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சக மராத்தி பயணி ஒருவர், “இது காலை வைக்கும் இடமா?” என சத்தமிட்டு மிரட்டியுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, திடீரென அந்தப் பயணியின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார். “உடனடியாக மன்னிப்பு கேள்” என மிரட்டிய அந்த நபர், தரக்குறைவான வார்த்தைகளால் அப்பயணியைத் திட்டியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் தங்களது கருத்துகளை அனல் பறக்கப் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
“ரயிலைத் தூய்மையாக வைத்திருக்கத் தெரியாதவர்களுக்கு இது போன்ற ‘சிஸ்டம் ரீஸ்டார்ட்’ அடிகள் தேவைதான்” என ஒரு தரப்பினர் மராத்தி நபருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
“சுத்தம் முக்கியம்தான், அதற்காகக் கையோங்குவதை எந்தச் சட்டமும் ஏற்காது. பலவீனமானவர்கள் மீது பலத்தைக் காட்டுவது அநாகரிகமானது” என மற்றொரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“வடமாநிலத்தவர் என்பதாலேயே அவர் தாக்கப்பட்டாரா?” என இச்சம்பவம் மொழி மற்றும் இன ரீதியான விவாதமாகவும் உருவெடுத்துள்ளது.
