ரயில்களில் பயணம் செய்யும்போது பொது ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், பயணி ஒருவர் வேர்க்கடலை தோல்களை பெட்டியின் உள்ளேயே சிதறவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வீடியோவில், ரயிலின் கீழ் படுக்கையில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர், தனது கைபேசியில் பேசிக்கொண்டே வேர்க்கடலை சாப்பிடுவதும், அதன் தோல்களை எவ்வித பொறுப்புணர்ச்சியும் இன்றி தரையிலேயே வீசுவதும் பதிவாகியுள்ளது.

இந்தச் செயல் குறித்து சக பயணிகள் யாரும் தட்டிக்கேட்காதது வியப்பை ஏற்படுத்திய நிலையில், தூய்மை இந்தியா திட்டம் போன்ற விழிப்புணர்வு முயற்சிகளுக்கு இது போன்ற செயல்பாடுகள் பெரும் பின்னடைவாக அமையும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரியே இது போன்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரயில்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க ரயில்வே சட்டத்தில் இடமுள்ளது குறிப்பிடத்தக்கது.