அமெரிக்காவின் அலபாமா (Alabama) மாகாணத்தில், ‘ஆண்டின் சிறந்த ஆசிரியை’ என்று கொண்டாடப்பட்ட நிக்கோல் ஸ்டேபிள்ஸ் (Nicole Staples) என்பவர், தனது சொந்தக் குழந்தையை பெல்ட்டால் சரமாரியாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி, அவரை பணி நீக்கம் செய்வதற்கும், கைது செய்வதற்கும் வழிவகுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலான அந்தக் கொடூரமான வீடியோவில், ஆசிரியை தனது குழந்தையை 20 முறைக்கு மேல் பெல்ட்டால் தாக்கி, ஆவேசமாகக் கத்துவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
NEW: ‘Teacher of the Year’ at an Alabama elementary school arrested after a horrific video of her allegedly beating her 12-year-old son with a belt was leaked by the boy’s older brother.
2nd-grade teacher Nicole Staples has been charged & fired from her job.
Staples’s older… pic.twitter.com/sAZL0l6wef
— Collin Rugg (@CollinRugg) November 24, 2025
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஆசிரியை நிக்கோல் ஸ்டேபிள்ஸ் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அலபாமா போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் (Child Protection Teams) மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் இணைந்து இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் சிறப்பான ஆசிரியையாகக் கொண்டாடப்பட்ட அதே நபர், இன்னொரு பக்கம் சொந்தக் குழந்தையை இவ்வளவு கொடூரமாகத் தாக்கியது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
