தாய்லாந்தில் உள்ள ஒரு கோயிலில், 65 வயது மூதாட்டி ஒருவரின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, அங்கிருந்த பணியாளர்கள், மூதாட்டி வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்குள் இருந்து அசைவு இருப்பதைக் கவனித்தனர். சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அந்தப் பெண் மெதுவாக மூச்சுவிட்டுக் கொண்டும், உள்ளே தட்டியும் கொண்டிருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இரண்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்த அந்தப் பெண்மணி இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம அதிகாரிகள் தவறாக நினைத்துவிட்டனர்.
Dimanche 23 novembre en Thaïlande, une femme de 65 ans a repris conscience dans son cercueil, quelques instants avant son incinération. La famille de la sexagénaire, qui était alitée depuis 2 ans, pensait que cette dernière était décédée naturellement dans son sommeil. pic.twitter.com/Oo0pdpE1Bs
— 20 Minutes (@20Minutes) November 25, 2025
உடனடியாகச் சடங்குகள் நிறுத்தப்பட்டு, அந்தப் பெண்மணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதிகாரபூர்வமான இறப்புச் சான்றிதழ் இல்லாததால், அவரது சகோதரர் அவசரமாக இறுதிச் சடங்கிற்காகக் கோயிலுக்குக் கொண்டு வந்திருந்தார். சவப்பெட்டிக்குள் இருந்து சத்தம் கேட்டதால், அவர் உயிர் பிழைத்தார். சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண்மணி இப்போது நலமாக இருக்கிறார்.
