நவி மும்பை சர்வதேச விமான நிலையம் தனது விமானச் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், அதன் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக 1,515 ட்ரோன்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வானில் தாமரை மலர், விமான நிலையத்தின் இலச்சினை மற்றும் இந்தியாவின் எழுச்சியைக் குறிக்கும் வண்ணமயமான உருவங்களை ட்ரோன்கள் ஒத்திசைவுடன் உருவாக்கியது காண்போரைக் கட்டிப்போட்டது.

 

வழக்கமாக இது போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் முக்கியப் பிரமுகர்களுக்காக நடத்தப்படும் நிலையில், இந்த விமான நிலையத்தை உருவாக்கிய கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக மட்டுமே பிரத்யேகமாக இந்த ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது அனைவரது நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.

இந்த விமான நிலையத்தை நனவாக்க இரவு பகலாக உழைத்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக அதானி குழுமம் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.