விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் காலில் விழுந்து இளம் ரசிகர் ஒருவர் ஆசிர்வாதம் வாங்கிய நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை அணி விளையாடி முடித்த பிறகு, பாதுகாப்பு வளையத்தை மீறி மைதானத்திற்குள் ஓடி வந்த அந்த ரசிகர், விராட் கோலியின் பெயர் பொறித்த ஜெர்ஸியை அணிந்திருந்தார். ரோகித் சர்மாவை நேரில் பார்த்த உற்சாகத்தில் அவர் காலில் விழுந்து வணங்கியதுடன், அவரைக் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
Rohit Sharma hugged a young fan as the fan was going to touch the feet of Ro ♥️ [Prabhat Khabar]
– Nice gesture by Rohit Sharma. pic.twitter.com/N48iJGbxiF
— Johns. (@CricCrazyJohns) December 25, 2025
“>
மேலும் மைதானத்தில் அரங்கேறிய இந்தச் சம்பவம் அங்கிருந்த வீரர்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவிடம் காட்டிய இந்த மரியாதை விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. ரசிகரின் இந்தச் செயலால் சிறிது திகைப்படைந்தாலும், ரோகித் சர்மா அவரை அன்புடன் கையாண்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
