கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள சேலூர் பகுதியில், மனிதாபிமானமற்ற முறையில் 40 நாள் பச்சிளம் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி (சிறுபான்மையினர்), தனது மதத்தைத் தாண்டி இந்து இளைஞர் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த சிறுமியின் பாட்டி, தனது பேத்திக்கும் அந்த இளைஞருக்கும் பிறந்த 40 நாள் பெண் குழந்தையைப் பழிவாங்கத் துடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் குழந்தை மட்டும் பாட்டியுடன் தனியாக இருந்தபோது, அக்குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது. தனது குழந்தையின் மரணத்தில் பாட்டியின் மீது சந்தேகம் கொண்ட அந்தச் சிறுமி, தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குழந்தையின் மரணம் குறித்துச் சிறுமி கேட்டபோது பாட்டி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரைப் பெற்ற போலீஸார், குழந்தையின் மரணம் குறித்து ‘சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது; அதன் முடிவுகள் வந்த பின்னரே குழந்தை கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும்.
இதற்கிடையே, மைனர் சிறுமியைத் திருமணம் செய்ததற்காக அந்த இந்து இளைஞர் மீது போக்சோ (POSCO) சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதவெறியால் ஒரு பிஞ்சு உயிர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
