
உத்திரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் நகரில் உள்ள கிராமத்தில் ரவிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது முகேஷ் குமார் என்பவர் ஓட்டி சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாலையோரம் நடந்து சென்ற ராஜ்குமார் என்பவர் சண்டையை தடுக்க முயற்சி செய்தார். இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரிடமும் சண்டையிட வேண்டாம் என்று கூறினார்.
அப்போது திடீரென ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.