தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் சிலர் ஆட்டோவில் வந்து ஒரு முதியவரை இறக்கி விட்டனர். உடலில் படுகாயங்களுடன் இருந்த முதியவரிடம் அந்த பகுதியில் மக்கள் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நூலஅல்லி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்(85) என்பது தெரியவந்தது. குளிரில் நடுங்கிய பெருமாளுக்கு அந்த பகுதி மக்கள் சாப்பாடு கொடுத்து போர்வையும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கீ.சாந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பெருமாளுக்கு 6  பிள்ளைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு பெருமாளை அவர்கள் அனாதையாக விட்டு சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வருவாய் துறையினரின் அறிவுறுத்தல் படி முதியவரின் உறவினர்கள் அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.