காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் மூதாட்டியை மீட்டு விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பது தெரியவந்தது. குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு ரயில் மூலம் வந்த பத்மாவதி மொழி தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார். அவரை அதிகாரிகள் முதியோர் இல்லத்தில் தங்க வைத்தனர்.

ஆனால் அவர் தனக்கு முதியோர் இல்லத்தில் தங்க விருப்பமில்லை என கூறி ஒடிசாவில் இருக்கும் குடும்பத்தினரிடம் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் ஒடிசா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த இரண்டு பெண் போலீசாரும், ஒரு ஆண் போலீசாரும் பத்மாவதியை மீட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். முன்னதாக மூதாட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.