SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி, இன்றைக்கு தமிழகத்தை ஆளுகின்ற கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் பதைபதைப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மாநாட்டில் எடப்பாடி அவர்கள் பங்கேற்பாரா ? பங்கேற்க மாட்டாரா ? என்ற சந்தேகத்தொடு இங்கே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பொய்களை இன்றைக்கு செய்தி ஊடகங்களில்  பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்..

அருமை பெருமக்களே.. எஸ்டிபிஐ கட்சி என்பது வேறு சிறு  அரசியல் ஆதங்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல.. மகத்தான இலட்சியங்களோடு உருவாக்கப்பட்டிருக்கின்ற சோசியல் டெமாக்ரடிக் ஆப் இந்தியா.. அரசியல் ஆதாயத்திற்காக ஒரு முடிவை எடுத்து விடாது. எஸ்டிபிஐ கட்சி என்பது ஒரு உயர்ந்த லட்சியத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிற ஒரு பேரியக்கம்.

இந்த  நாட்டினுடைய மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட  வேண்டும். இந்த நாட்டினுடைய ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நாட்டினுடைய அரசியல் சாசன சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் நீதியும், நேர்மையும், நியாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட  மக்களினுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒடுக்கப்பட்ட – இஸ்லாமிய பெருங்குடி மக்கள், கிறிஸ்தவர்கள், அவர்கள் இழந்து போன உரிமைகள், அவர்கள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்கிற அந்த மகத்தான அந்த குறிக்கோளோடு உருவாக்கப்பட்டிருக்கின்ற ஒரு புரட்சி படைதான்  சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா.. எஸ்.டி.பி.ஐ கட்சி.இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் பதைபதைப்போடு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.