செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், பொங்கல் பண்டிகை கடந்த சில வருடங்களாக வேண்டுமென்றே திட்டமிட்டு , உள்நோக்கத்தோடுஇந்த பண்டிகையை ஒரு கிறிஸ்துவ பண்டிகையாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. இஸ்லாமியர்கள் இந்த விசயத்துல தலையிடுவதில்லை… அவுங்க பொங்கல் வாழ்த்து  சொல்லுவார்கள். நாம் அழைத்தால் விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்,  அவர்கள் மசூதியில் பொங்கல் வைப்பதில்லை.

ஆனால் கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே,  உள்நோக்கத்தோடு….  சர்ச்சில் பொங்கல் வைப்பது,  சர்ச்சில் ஜல்லிக்கட்டு நடத்துவது …. பிறகு  அரசாங்கம்,  அரசியல் கட்சிகள் எல்லாம் சேர்ந்துக்கிட்டு, எதோ பொங்கலில் சமத்துவமே இல்லாத மாதிரி, இவன் எதோ சமத்துவ  பொங்கல், திராவிட பொங்கல் என சொல்லி, அது மாதிரி அரசியல் கட்சிகளும்… 3 மதம் சம்மந்தப்பட்டவர்ளை எல்லாம் கூப்பிட்டு நிற்க வச்சிக்கிட்டு, அரசாங்கம் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்குறாங்க… இந்த முறை மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கின்றார்கள்.

திராவிட மாடல் அரசாங்கத்தால்… திமுகவால் மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.  இவங்க எதிர்க்கட்சி  ஆக இருந்த போது ஐயாயிரம் கொடுங்கள் என்று சொன்னார்கள்.  பொங்கல் பொருட்கள் 28 பொருட்கள் இருந்தது. முந்திரி, திராட்சை, எல்லாம் இருந்தது. இப்ப  நிதி நிலைமையை கருத்தில் கொண்டு…..

கருணாநிதி சிலையை வைப்பதற்கு நிதி நிறைய இருக்கிறது. கருணாநிதி பெயரில் ஒரு பெரிய ஸ்டேடியத்தை கட்டி,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும்,  கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் ? எதைப் பார்த்தாலும் கருணாநிதி பெயர் வைப்பது…  அதற்கெல்லாம் செலவு பண்ணுவதற்கு காசு இருக்கிறது என தெரிவித்தார்.