ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான 275 பேரில் 88 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 1000 இக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் மற்றும் சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் ரூ.10 லட்சம் அறிவித்துள்ளது.