ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக பூரி, கட்டாக், புவனேஷ்வரில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவையை அறிவித்தார் முதல்வர் நவீன் பட்நாயக். பேருந்து பயணத்திற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என அவர் அறிவித்துள்ளார்.

ரயில் விபத்து ஏற்பட்ட பாலசோரிலிருந்து பூரி, கட்டாக், புவனேஷ்வர் செல்வதற்கும் இன்று காலை முதல் இலவச பேருந்து இயக்கப்படுகிறது. அதன்படி, பகல் 12, 2 மற்றும் மாலை 4 மணி அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.