மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பகிர்ந்துள்ள புதிய தொழில்நுட்பம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

மகேஷ் என்பவர் கண்டறிந்த இந்த முறையின் மூலம் வெறும் அரை லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி அதிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுத்து நிலக்கரியை எரியூட்டி சமையல் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். வழக்கமான எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும்போது வெளிப்படும் வாயுக்கள் உடல்நலத்திற்குத் தீங்கானது என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்தத் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட முறை சுற்றுச்சூழலைத் தூய்மையாக்குவதுடன் புற்றுநோய் அபாயத்தையும் தவிர்க்க உதவும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு தேவையில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமானவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படும் நிலையில் இத்தகைய உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் கிராமப்புறங்கள் வரை சென்றடைந்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.