ராஜஸ்தானின் உதைப்பூர் மாவட்டத்தில் ஒரு பயங்கரமான வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது சேவாஷ்ரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் தோட்டத்தில் மொத்தம் 18 நாகப் பாம்புகள் இருந்துள்ளது. பாம்பு குட்டிகளுடன் சேர்ந்து முழுமையாக வளர்ந்த ஒரு நாகப்பாம்பும் அவற்றை பாதுகாத்து வந்தது. இதனை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பதட்டம் அடைந்தனர். இதை அடுத்து உடனடியாக அவர்கள் காட்டு விலங்கு மீட்பு மையத்தைச் சேர்ந்த டாக்டர் சாமன் சிங் சவுகானுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், குப்பைகள் கவனமாக அகற்றப்பட்ட போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தது. இறுதியில் ஒரு பெரிய நாகப்பாம்பு மற்றும் அதன் புதிதாக குஞ்சு பொரித்த 18 குட்டிகள் வெளிவந்தது. இந்த சம்பவம் ஹோட்டல் ஊழியர்களின் இடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.