ரஷ்யா- உக்ரைன் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளங்களில் தெரிவித்ததாவது, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களை போரில் தயார் செய்வது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா எங்களுக்கு எதிராக வடகொரியாவுடன் வெளிப்படையாக கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் 3.5 பீரங்கிகள் வாங்கியுள்ளது. தொடர்ந்து உக்ரைனுக்கு எதிராக போலி ஆவணங்கள் சீருடைகள் மூலம் வடகொரிய வீரர்களை குர்க்ஸ் நகரில் முகாமிட்டு தாக்குதல் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது. இதற்கான செலவுகளையும் ரஷ்ய அரசே ஏற்றுக் கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து வடகொரியா அதிபர் தங்களது சிறந்த பத்தாயிரம் வீரர்களை ரஷ்யாவுக்கு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. ரஷ்ய ராணுவத்தில் தற்போது 3000 வடகொரியா வீரர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 12000 ஆக உயர வாய்ப்புள்ளது. வடகொரியாவின் நடவடிக்கைகள் தற்செயலானது கிடையாது. சீனா எங்களுக்கு ஆதரவாக செயல்படும் என நான் கருதவில்லை. ஆனால் ரஷ்யாவின் செயல்கள் குறித்து சீனா மவுனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.