மருத்துவம்,  இயற்பியல் துறைகளுக்கு ஏற்கனவே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக இந்த மூன்று பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது..

2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.  மருத்துவம்,  இயற்பியலுக்கு அடுத்தபடியாக வேதியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பில்,

குவாண்டம் டாட் எனப்படும் ஒரு அமைப்பை கண்டறிந்த காரணத்திற்காக மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த மெளங்கி பவெண்டி, லுயிஸ்  ப்ரூஸ், அலெக்ஸி எக்கிமோவ்  ஆகிய மூவரும் குவாண்டம் டாட் கண்டறிந்ததற்காக இந்த நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குவாண்டம் டாட் கம்ப்யூட்டர்களில் எல்லாம் பயன்படுத்துவார்கள்.  குறிப்பாக நாம் பயன்படுத்தும் கணினியை விட மிகவும் அதிக திறன் வாய்ந்த கணினி உபயோகத்திற்கு இந்த குவாண்டம் டாட் பயன்படும். குவாண்டம் டாட் புள்ளியை வைத்து கணினிகளை இயக்க முடியும் என சொல்லப்படுகிறது. இந்த ஒரு கண்டுபிடிப்பதற்காக மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.