கல்ட் ஸ்போர்ட் (Cult sport) நிறுவனத்தின் Ace x மாடல் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது. நாளை  தொடங்க இருக்கும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் லைவ் கிரிக்கெட் ஸ்கோரை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இதன் விலை ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த Ace x மாடல் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் சிலிகான், ப்ளூ சிலிகான், கிரே சிலிகான் ஆகிய கலர் ஆப்சன்களில் விற்பனைக்கு கிடைக்கும்.