
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த முதலமைச்சரும் சரி, அமைச்சரும் சரி, அந்த கட்சியும் சொல்லுவாங்க… சிறுபான்மை மக்களுக்கு தாங்கள் தான் பாதுகாப்பு இருப்பதை போலவும், திமுக தான் நிறைய நன்மை செய்வது போலும் சொல்வார்கள். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒரு துரும்பை கூட சிறுபான்மை மக்களுக்கு செய்யவில்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் ரமலான் ரமலான் நோன்புக்கு விலையில்லா அரிசி கொடுத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். ஹெச் மானியம் அண்ணா திமுக அரசாங்கம். ஹச் புனிதம் மேற்கொள்ள ஹச் இல்லம் கட்ட 15 கோடி கொடுத்தோம். இப்படி பல திட்டங்களை சிறுபான்மை மக்களுக்கு வழங்கிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.
அதேபோல கிறிஸ்தவ பெருமக்களுக்கும் நிறைய உதவிகளை செய்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் தான். ஆனால் திமுக ஆட்சியில் எதுவுமே நடக்கல. அது மட்டுமல்ல நம்ம கோவையில் நடந்த சம்பவம் தெரியும். திமுக ஆட்சியில் இருக்கும் போது உக்கடம் பகுதியில் ஆயிரம் காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், வீடு புகுந்து கொள்ளையடிச்ச காட்சி எல்லாம் திமுக ஆட்சியில் தான் நடந்தது. இவர்களா ?
சிறுபான்மை மக்களை பாதுகாக்க கூடியவர்கள். சிறுபான்மை மக்களை கொள்ளை அடித்த அரசாங்கம் திமுக அரசாங்கம். சிறு சிறு தொழில் இந்தியாவிலேயே அதிகமாக இருப்பது தமிழ்நாடு. அதிகமாக வேலை வாய்ப்பு கொடுப்பதும் சிறுகுறி தொழில்தான். ஆனால் இந்த அரசாங்கத்துக்கு அதை பத்தி எல்லாம் கவலை கிடையாது.
அதுவும் கொரோனா காலத்துல கடுமையான சிறுகுறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்பட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த தொழில் ஏற்றம் பெறுகின்ற சூழ்நிலையில் மின்கட்டண உயர்வு என்ற மிகப் பெரிய சுமையை சுமத்தி, அந்த தொழில் நசுங்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறது. இதை நான் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டேன். ஆனால் இந்த விடியா திமுக அரசு இதற்கெல்லாம் செவி சாய்க்க வில்லை. இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.