தனது 70 வயதிலும் யாருடைய உதவியுமின்றி உழைத்து வாழும் தீபாலி கோஷ் என்ற மூதாட்டியின் தன்னம்பிக்கை நிறைந்த கதை சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது. கணவர் மறைவுக்குப் பிறகு கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வரும் இவர், பொருட்களை வாங்குவது முதல் சமைப்பது மற்றும் பாத்திரங்களைக் கழுவுவது வரை அனைத்து வேலைகளையும் தனி ஆளாகவே செய்து வருகிறார்.
View this post on Instagram
வறுமை மற்றும் வயது மூப்பு காரணமாகக் காது கேட்கும் திறன் குறைந்த நிலையிலும், முதியோர் இல்லத்திற்குச் செல்ல விரும்பாமல் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். ஒரு நாளைக்கு ஐந்து வாடிக்கையாளர்கள் கூட வராத நிலையில், ஒழுகும் கூரை மற்றும் உடைந்த பலகையைக் கொண்ட அதே சிறிய கடையிலேயே அவர் வசித்தும் வருகிறார்.
இவரது நிலையை விளக்கி ஆராதனா சாட்டர்ஜி என்ற பெண் பகிர்ந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அந்த மூதாட்டியின் கடையைப் புதுப்பித்துக் கொடுக்கவும் அவருக்கு நிதியுதவி அளிக்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்வந்துள்ளனர்.
