ராஜஸ்தானின் கோட்டா பகுதியில், 65 வயதான தாயை அவரது மகன் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி, கடும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், தீப்பூ மேஹ்ரா என்ற நபர், தனது வயதான தாயை பலத்தமாக கைகளால் மற்றும் காலால் அடித்து தாக்கும்  காட்சிகள் பதிவாகியுள்ளது.

அந்த நேரத்தில் வீட்டில் குழந்தைகள் அழும் சத்தமும், வேறு ஒரு பெண் தடுத்து நிறுத்த முயற்சிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த கோர சம்பவம் கடந்த ஜூலை 20ஆம் தேதி, கோட்டாவில் உள்ள ஓம் கிரீன் மெடோஸ் குடியிருப்பில் நடைபெற்றது.

வீடியோவில், முதியவர் சந்தோஷ் பாய் தரையில் உட்கார்ந்திருந்தபோது, அவரது மகன் மேஜையில் அமர்ந்தபடியே தலைமுடியை இழுத்து தாக்குகிறார். பின்னர் நின்றபடியே தலையிலும், கழுத்திலும் பலத்தமாக அடிக்கிறார்.

அதற்கு இடையில், “குத்தே மத் கர்நா” என்ற அழுகுரலும் கேட்கிறது. சம்பவத்தின் இறுதியில் முதியவர் தரையில் பட்டு விழுந்திருந்தபோதும் தாக்குதல் தொடர்ந்தது.

தாயார் சந்தோஷ் பாய் அளித்த புகாரின் பேரில், அவரை மட்டுமன்றி கணவரையும் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்திற்கு முன் தனது சகோதரியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் தீப்பூ மேஹ்ராவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டபோதிலும், பிணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.