தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, DMK கட்சியினுடைய தன்மை என்ன ? இந்த கட்சியினுடைய ஸ்டேஜ் என்ன ? இந்த கட்சியினுடைய பரிணாம வளர்ச்சி  எப்படி ? முதலில் இருந்த தலைவர்கள் என்ன ஆனாங்க ?  அண்ணாதுரை எடுத்துக்காட்டு….  கடைசி காலத்தில் வரை தன்னுடைய குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என நினைத்தவர்.

குறிப்பாக அவருடைய வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் அவர்கள்,  அரசியலுக்கு வரவே இல்லை….  டாக்டராக இருந்து ரிட்டைட் ஆகிட்டு டாக்டர் பரிமளம் அவர்கள் கிணத்தில் குதித்து தற்கொலை பண்ணிகிட்டாரு. அவருக்கு வந்த புற்று நோய்க்கு குடும்பத்தில் காசு இல்ல. யாருப்பா எனக்கு காசு கொடுத்து என்னுடைய வியாதியை குணப்படுத்துவார்னு அண்ணாதுரை உடைய வளர்ப்பு மகன் கிணத்துல குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டாரு. அப்படியும் தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழகத்திற்கு முழுமையான… எதிரான…. ஒரு தீய சக்தியாக மாறி இருக்கிறது. அப்புறப்படுத்த வேண்டிய கலாச்சார கடமை நமக்கு இருக்கிறது. ஒரு தமிழனாக நம்முடைய கலாச்சார கடமை திராவிட முன்னேற்ற கழகத்தின் தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். அடுத்து 75 நாட்களில் முழுமையாக நீங்க பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.