இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துகளை காட்டிலும் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ரயில் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகமும் ஏராளமான வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி ரயில் நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய உயர்தர அறை திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு இணையாக அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்த அறையை சுமார் 180 பேர் பயன்படுத்த முடியும்.

அதாவது சொகுசு இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் பயணிகளுக்கு தேவையான சைவ மற்றும் அசைவ உணவுகள், சிற்றுண்டி கடை, உடைமைகளை வைக்க பிரத்தியேக வசதி மற்றும் கழிவறை வசதிகளும் இதில் உள்ளன. மேலும் ஒரு மணி நேரம் இந்த அறையில் தங்குவதற்காக பயணிகளிடமிருந்து 200 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். அது மட்டுமல்லாமல் பயணிகளுக்கு இலவச வைபை வசதி, டீ காபி ஆகியவையும் வழங்கப்படும். மேலும் மூன்று மணி நேரம் தங்குவதற்கு 840 கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் கூடுதலாக பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில் மட்டும் குளிர்பானம் ஆகியவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.