2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் மார்ச் 18 முதல் மார்ச் 20ஆம் தேதி இரவு 11.50 மணி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்ப பதிவு நாளையுடன் முடிவடைவதால் exams.nta.ac.in என்ற இணையதளத்தில் உடனே விண்ணப்பியுங்கள்.