திருச்சியில் தேசிய ஜனநாயக கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இது தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பேனர் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பேனரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களும் கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை.

இந்த பேனரில் பாஜக கட்சியின் மாநில தலைவர், அன்புமணி ராமதாஸ், ஜி கே வாசன் உள்ளிட்டா பல கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என கூறிவரும் நிலையில் அவரது புகைப்படம் இடம்பெறாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.