அதிமுகவின் உட்கட்சி குழப்பங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரின் விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கியமான விளக்கங்களை தெரிவித்துள்ளார்.
நெல்லை பூத் கமிட்டி கூட்டத்தில், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்” என சொல்லியது நானல்ல… அண்ணாமலை தான் அதைக் கூறினார்” என தெரிவித்துள்ளார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தலைவராக எடப்பாடியை தான் அறிவித்ததாக டிடிவி தினகரன் கூறுவது தொடர்பாக, “அதை நான் அறிவிக்கவில்லை” என சுட்டிக் காட்டியுள்ளார்.
“அமமுக கூட்டணியில் இருந்து விலக நான் தான் காரணம்” என டிடிவி தினகரன் கூறுவது குறித்து பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அவர் அப்படி சொல்வதற்கே என்ன ஆதாரம் இருக்கிறது என எனக்கே தெரியவில்லை” என்றார். அதிமுக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை ஆரம்ப காலத்திலேயே தாம் வலியுறுத்தியதாகவும், அதை தொடர்ந்து கூறி வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, தமிழக NDA கூட்டணியில் நிலவும் பிளவு குறித்து புதிய விவாதங்களை கிளப்பி உள்ளது.
