லோகேஷ் இயக்கும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். அதன்படி த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அதோடு மன்சூர் அலிகானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் “நான் இன்னும் லியோ சூட்டிங்கில் கலந்துகொள்ளவே இல்லை என கூறியிருக்கிறார்.

மேலும் சரக்கு எனும் படத்தை தற்போது எடுத்து வருகிறேன். லியோ திரைப்படத்திற்கு நிறைய தேதிகள் ஒதுக்கியிருக்கிறேன். ஆகவே சரக்கு திரைப்படத்தை முடித்துவிட்டு தான் லியோ சூட்டிங்கில் பங்கேற்பேன் என அவர் கூறி உள்ளார்.