
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீங்க எல்லாம் யாருமே உள்ள போக முடியாது. ஜெயில்ல உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்க முடியுமா ? உள்ள போய் பார்க்க முடியாது. செந்தில் பாலாஜிக்கு பஸ்ட் கிளாஸ் கொடுத்திருக்காங்க. உள்ள என்ன நடக்குனா…. ஜெயிலர் வாசல்லயே காத்துட்டு இருப்பார். அவரும் ஒரு பாய் போட்டு, தலகாணி போட்டு….
சூப்பிரண்டு, ஜெயிலரும் படுத்திருப்பாங்க. ஐயா, என்ன வேணும்… எனக்கு பிரியாணி வேணும். நான் உடனே அனுப்புறேன் ஐயா…சொல்லி பிரியாணி வரும்.. அடுத்து என்னையா.. சிக்கன் 65 அதுவும் வரும், என்னென்ன தேவையோ மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறி குழம்பு, சூப்பு இது எல்லாமே வரும். இந்த மாதிரி ஜெயில் சிறைவாசிக்கு ஆளுங்கட்சிங்கன்றதனால கொடுக்கங்க. ஏர் கண்டிஷனர் கூட போட்டு கொடுத்தாலும் கொடுத்திருக்கலாம்.
யார் போய் பாக்குறது இதெல்லாம். இதெல்லாம் வந்து ED பொருத்தவரை கண்காணிப்பு பண்ணனும். ED ஜெயில் உள்ள போய் பார்க்கணும். அவருக்கு A – கிளாஸ் உண்டான வசதி கொடுக்கிறதுல எங்களுக்கு மாறுபட்ட கருத்து. ஆனால் ? ரொம்ப ஓவரா போய் வீட்ல இருக்குற மாதிரி எல்லா வசதியும் செஞ்சி கொடுத்தா.. அது ஒரு மிகப்பெரிய தப்பு அது என தெரிவித்தார்.