ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் (Khost) மாகாணத்தில், தனதுக் குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் உட்பட 13 பேரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு, சுமார் 80,000 மக்கள் திரண்டிருந்த விளையாட்டு அரங்கத்தில் (Stadium) வைத்துப் பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தலிபான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கொலை செய்யப்பட்டக் குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மூலம் துப்பாக்கியால் சுட்டு இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
The #Taliban have turned #Afghanistan into an exhibition of brutality: yesterday flogging, today a public execution in the Khost stadium. A man was gunned down on the orders of #Hibatullah, in front of hundreds of children and teenagers and most shocking of all, the final shot… pic.twitter.com/cfrlwvWgMR
— Golchehrah Yaftali (@womenaidafghan1) December 2, 2025
மங்கல் (Mangal) என்று அடையாளம் காணப்பட்ட இந்தக் கொலையாளிக்குத் தலிபானின் உச்ச தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸாதா (Hibatullah Akhundzada) ஒப்புதல் அளித்த பிறகே இந்தச் செயல் அரங்கேறியுள்ளது.
இந்தச் சம்பவம், தலிபான்கள் 2021-இல் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் நிறைவேற்றிய 11-வது நீதித்துறை மரண தண்டனை ஆகும். இந்தக் கொடூரமானச் செயல் குறித்து ஐ.நா.வின் ஆப்கானிஸ்தானுக்கானச் சிறப்புத் தொடர்பாளர் ரிச்சர்ட் பென்னட் (Richard Bennett), “இது மனிதாபிமானமற்ற, கொடூரமான மற்றும் சர்வதேசச் சட்டத்திற்கு முரணானது” என்று கூறி, உடனடியாகப் பொது மரண தண்டனைகளை நிறுத்தும்படி வலியுறுத்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
