பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீதுத் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டி, மாநில மகளிர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சமீபத்தில் இவருக்குப் பிறந்த ஆண் குழந்தை குறித்த சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராமில் ஒரு பரபரப்பானப் பதிவை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் ரங்கராஜ் குழந்தையை ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா கூறியதை அவர் மறுத்தார். மேலும், “டி.என்.ஏ. பரிசோதனையை நான் மறுக்கவில்லை.

குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்” என்றும் ரங்கராஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என் மகன், அவன் அப்பா செய்வது போலவே விரல்களை மடக்குகிறான்.

ஒரே ஜீன். இதை விட வேறென்ன டிஎன்ஏ ஆதாரம் வேணும் மிஸ்டர் கணவரே. சிக்கிட்டீங்க!” என்றுப் பதிவிட்டு, ரங்கராஜுக்கு மறைமுகமாகக் கடும் சவால் விடுத்துள்ளார்.