இந்தக் காலத்தில் எவ்வளவு தான் டெக்னாலஜி பயன்படுத்தி பேய் படம் வந்தாலும் அந்த காலத்தில் 1993-ல் வெளியான மலையாளத் திரைப்படமான “மணிச்சித்ரதாழ்” என்பது ஒரு சுவாரசியமான பயம்கூட்டும் படமாகும். 30 லட்சம் ரூபாய்க்கு தயாரிக்கப்பட்ட இந்த படமானது 7 கோடி ரூபாய் வசூல் செய்து 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலம் நடிகை ஷோபனா “கங்கா நாகவல்லி” கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்றார். இதேபோல் இந்த திரைப்படத்திற்கும் சிறந்த பொது திரைப்படம் என்ற தேசிய விருதும் கிடைத்தது.

“மணிச்சித்ரதாழ்” படத்தின் பாடல்களை எம்.ஜி. ராதாகிருஷ்ணன் இசையமைத்தார், பின்னணி இசையை ஜான்சன் வழங்கினார். இந்த படம் கன்னடத்தில் “அப்தமித்ரா” என்ற பெயரில் மறுவிமர்சனம் பெற்றது. அதன்பின் அது தமிழில் “சந்திரமுகி”, பெங்காளியில் “ராஜ்மஹல்” மற்றும் இந்தியில் “பூல் புலையா” என்ற பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது.

அதே நேரத்தில், தமிழிலும் சந்திரமுகி ஒரு வருடமாக திரையரங்கிகளில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. “மணிச்சித்ரதாழ்” திரைப்படம் 2024 ஆகஸ்ட் 17 அன்று 4K டால்பி ஆட்டமாஸ் பதிப்பில் மறுவெளியீடு செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. முதல் இரண்டு நாட்களில் ரூ. 1.10 கோடி வசூல் செய்து, கேரளாவில் பயங்கர வரவேற்பை பெற்று ஹவுஸ்ஃபுல் அடைந்தது.