மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ட்விங்கிள் ரவுத்- ராமா லக்ஷ்மண ரவுத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு வேலை தேடி நாக்பூருக்கு குடி பெயர்ந்தனர். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது குழந்தை அழுததால் கோபத்தில் டுவிங்கிள் ரவுத் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து ஒரு மரத்திற்கு கீழ் வைத்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் 4 கிலோ மீட்டர் தூரம் குழந்தையின் உடலை தூக்கிக்கொண்டு ட்விங்கிள் ரவுத் நடந்து சென்றுள்ளார்.

அதே சமயம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் ட்விங்கிள் ரவுத்திடம் விசாரணை நடத்திய போது உண்மை தெரியவந்தது. உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டுவிங்கிள் ரவுத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்