
தமிழகத்தில் பாஜகவோடு சேர்ந்து எந்த கட்சி வந்தாலும் அது வெற்றி பெறாது. பாஜகவோடு கூட்டணி வச்சு தான் 2021 தேர்தலில் ஏடிஎம்கே தோல்வியுற்றது அப்படின்னு சொல்றாங்க. ஆனால் உங்களுடைய பேச்சு எல்லாமே பாஜகவை ஆதரிக்கிற மாதிரி இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
தோல்வியுற்றார்கள் என்றால், அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு தானே… இப்போ அவர்களோடு பயணித்ததால் தோல்வியுற்றார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டால், அவங்க அந்த முடிவில் தான் அவர்கள் போகணும்… நான் என்ன சொல்றேன்னா…. நான் முடிவெடுக்கிறேன். நல்ல முடிவு எடுக்கிறேன்…. இன்னைக்கு இவுங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்…..
இந்தியாவுடைய பெயர் உயர்ந்து இருப்பதால் அது மோடி அவர்களால் தான் என்று சொல்கிறேன். ஒட்டுமொத்த இந்தியாவின் தலைவர் அவர் தானே இன்னைக்கு… தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாரத பிரதமர்….. இந்தியாவின் பாராளுமன்றத்தில் இருக்காரு…. அவர் தான் நாட்டின் பிரதமர்…. நாட்டின் பிரதமர் தான் ரெப்ரசென்டேட்டிவ் த கண்ட்ரி… நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் தான் இந்திய நாட்டின் முகம்.
கடந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணியில் இருந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
அந்த கூட்டணி எல்லாம் இப்ப இல்ல. அந்த கூட்டணி எல்லாம் போகல. அதை நான் வந்து சிந்தித்துக் கூட பார்க்கல. அந்த மாதிரி பேச்சுவார்த்தை பண்றதுக்கு தயார் நிலையில் இல்லை. அன்னைக்கு இருந்த சூழல் வேறு. அதனால அந்த முடிவு எடுத்தோம், இப்ப அப்படி இல்ல என பேசினார்.