செய்தியாளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  நம்முடைய கூட்டுறவு வங்கி….. மாவட்ட கூட்டுறவு வங்கியின் கிளை ஒன்று அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இந்த பகுதி மக்களுக்கு வங்கிப் பணி செய்வதற்காக…  ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு 3 கட்டிடங்கள் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நெத்தியிலிருந்து கட்டிக் கொடுத்துள்ளோம்…..

என்னுடைய முயற்சியில் மயானத்தில் குளிக்கின்ற தொட்டி,  பழைய விளாங்குடியில் குளிக்கும் தொட்டி அமைத்துக் கொடுத்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 2023-24இல் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காரல் மார்க்ஸ்  விரிவாக்க பகுதியில் அங்கன்வாடி மையம் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஒதுக்கப்பட்டு விட்டது.

ஜீவானந்தம் தெருவில் புதிய போர்வெல் 5.50 லட்சம் ரூபாயில் அமைப்பதற்கும்  நிர்வாக அனுமதிக்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண செல்லூர் ராஜு ஆகிய என்னை இன்று  உலகம் அறிய செய்தவர்கள்  மதுரை மேற்கு தொகுதி மக்கள்.  இந்த மக்களை உயிருள்ளவரை,  என்னுடைய குடும்பமும்…  என்னுடைய துணைவியாரையும்  அழைத்து வந்தேன்.

ஏன்னா அவங்களும் ஓட்டு கேட்டவர்கள். எங்களுடைய உயிர் மூச்சு உள்ளவரை…. என்னுடைய நினைவுகள் இருக்கும் வரை… இந்த அளவுக்கு என்னை உயர்த்திய உயர்த்துவைத்த மக்களுக்காக என்றும் பாடுபடுவேன்..  அதே மாநகர மக்களுக்காகவும் பாடுபடுவேன். என்னுடைய காலத்திலே,  என்னுடைய முயற்சியில் 10,000 கோடிக்கு மேல பணிகள் மதுரை மாநகரில் எடுக்கப்பட்டு,  அத்தனை பணிகளும் விரைவாக…  நாங்கள் எங்கள் காலத்தில் இருக்கிற வரை முடிச்சோம், உங்களுக்கு தெரியும்….  எல்லாரும் பாராட்டற அளவுக்கு ஆனால்கடந்த கடந்த மூன்று ஆண்டு ஆக போகுது… ஆனால் இதுவரை  DMK அரசு ஏதும் செய்யல என விமர்சனம் செய்தார்.