கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அப்போது அவரை வரவேற்க வழி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்றனர். மேலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க சாளுக்கியா சர்க்கிள் சிவாஜி நகரை சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் மோடியின் புகைப்படத்தை கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

பெங்களூரில் உள்ள 3 ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க வந்த மோடியை பார்த்தபின் அவர் கூறியதாவது, நான் ஏற்கனவே பிரதமரை 3 முறை பார்த்து உள்ளேன். ஒருமுறை கை கொடுக்கும் தூரத்தில் நின்று பிரதமரை பார்த்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

அந்த நாள் எனக்கு மறக்கவே முடியாதது. பிரதமர் நரேந்திர மோடியால் தான் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. நான் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர், பாஜக கட்சியின் தீவிரத் தொண்டர்.

அவர் இந்திய நாட்டிற்காக கடுமையாக உழைத்து வருபவர். அமெரிக்கா வரிவிதிப்பதாக கூறி மிரட்டினாலும் பிரதமர் மோடி பயப்பட மாட்டார் அவ்வளவு பெரிய சக்தி மான்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு அல்லாஹ் கொடுத்த பரிசு ஆவார். அதனை நான் எந்த இடத்திலும் தைரியமாக சொல்வேன் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எனக்கு இரவு முழுவதும் தூக்கமே இல்லை இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.