திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  ஒட்டுமொத்த இந்து மதத்திற்கான வேதம் இல்லை. எனவே இந்து என்கிற உணர்வை உருவாக்குவதற்கு அவன் கையாளுகிற யுக்தி சாதி  உணர்வை தூண்டுவது. உன்னை முதலியார் என்று சொல்லும் போது நீ ஒப்புக்கொண்டாள் நீ இந்து என்று ஏற்றுக் கொள்கிறாய்.

உன்னை படையாட்சி அல்லது  வன்னியர் என்று சொல்லுகிற போது ஆம், நான் வன்னியர்,  நான் படையாட்சி என்று நீ ஏற்றுக் கொண்டால்… நீ  அந்த உணர்வை நீ வளர்த்துக் கொண்டால் உன்னை அறியாமல் நீ இந்து என்று ஒத்துக் கொள்கிறாய். மத உணர்வு அப்படித்தான் தூண்ட முடியும்.

உன்னை பறையர் என்று சொல்லுகிறபோது,  அந்த சங்கத்தை இவன் ஊக்கப்படுத்துவான். அந்த உணர்வை நீ பெற்றால் நீ இந்து என்பதை ஏற்றுக் கொள்கிறாய். இந்து உணர்வு ஊட்டப்படும், மலர்ந்து விடும். அவனுக்கு பெரும்பான்மை வாதம் என்ற அடிப்படையில் இந்துக்கள் பெரும்பான்மை. எனவே ஹிந்துக்களின் வாக்கு வங்கி பிஜேபிக்கு வேண்டும், அதுதான் இந்துத்துவா.

பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையில் இந்துக்களின் வாக்குகளை திரட்டுவதற்கான செயல் யுக்தி தான் இந்துத்துவா. மதம் மதமாக இருப்பது பிரச்சனை இல்லை, மதத்தை வாக்கு வங்கிக்காக  பயன்படுத்துவது தான் பிரச்சனை. உள்ளபடியே இந்து மதத்தை சார்ந்த தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்?  மடாதிபதிகள் என்ன செய்ய வேண்டும்? சங்கராச்சாரி  போன்று மத குருமார்கள் என்ன செய்ய வேண்டும்? மோடியை , அமித்ஷாவை கூப்பிட்டு செவிலில் நான்கு அறைவிட வேண்டும்.

ஏண்டா… நீங்கள் அரசியல் ஆதாயத்திற்கு எங்கள் மதத்தை பயன்டுத்துகிறீர்கள், எங்கள் மதத்தின் உணர்வுகளை பயன் படுத்துகிறீர்கள் .என்று கேக்க வேண்டும். அவர்களின் மத உணர்வை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக….  ராமனை பயன்படுத்துகிறார்கள், அனுமனை பயன்படுத்துகிறார்கள், காளியை பயன்படுத்துகிறார்கள் என தாறுமாறாக விமர்சித்தார்.