தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2025-2026 ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அழகிகள் கலந்து கொண்டனர். இந்த அழகி போட்டியின் இறுதிப்போட்டி வருகிற 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கோவில்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் அழகிகள் தங்களது திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மில்லா மாகி என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அழகி உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் போட்டியில் ஆர்வம் காட்டிய இவர் தற்போது உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் காணப்படும் வெப்பம் காரணமாக இவர் உடல்நல குறைவிற்கு ஆளானார் என்று கூறப்படுகிறது. இதனால் அழகி போட்டியில் இருந்து விலகிய அவர் தன் சொந்த நாடான இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.