திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… 31 ஆயிரம் அரசு பள்ளிளில்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் காலையில் பள்ளிக்கு உணவு சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு போகலாம். அந்தத் திட்டத்தில் நானும் ஒரு முக்கிய பயனாளி. தமிழ்நாட்டுடைய எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் ? சுற்றுப்பயணம் போனாலும்…  முதல் வேலை காலை எட்டு மணிக்கு பள்ளிக்கு போய் அந்த பசங்களோட உட்கார்ந்து சாப்பிடுவது தான் என்னோட முதல் பணி.

அதுக்கப்புறம் தான் அடுத்த வேலை ஆரம்பிப்பேன். அது ஏன் தெரியும்ல ? எல்லாரும் சொல்லுவாங்க…  காலையில சாப்பிடறது தான் முக்கியமான உணவு. அந்த  பசங்களோட உட்கார்ந்து சாப்பிட்டு,  தரம் நல்லா இருக்கா ?  நேரத்துக்கு கொடுக்குறாங்களா ? அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர்.. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்குத்து நம்முடைய திராவிடம் மாடல் அரசு.

மாணவர்களுடைய வருகை பதிவேடு..  இம்ப்ரூவ் ஆகி இருக்கா ? இதுவரைக்கு பள்ளிக்கூடத்திற்கு வராத குழந்தைகள் எல்லாம் வாராங்களா…  அனைவரும் பாராட்டிட்டு இருக்காங்க… தெலுங்கானாவில் இருந்து அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் எல்லாம்  தமிழ்நாட்டுக்கு வந்திருக்காங்க. எப்படி இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தினீங்க ? அப்படின்னு பார்க்கிறதுக்காக….  இந்த திட்டத்தை அவங்க மாநிலத்துல விரிவு படுத்துவதற்காக ஆய்வு செய்வதற்காக…  தெலுங்கானாவில் இருந்து அதிகாரிகள் வந்துள்ளார்கள் என பெருமையுடன் பேசினார்.