பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக பலவித செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து எச்சரிக்கை நிலையை கடைபிடித்து வருகின்றன. ஒரு புறம் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டம் பற்றி அரசாங்கம் சில விதிகளை வகுத்து ஊழியர்கள் இதுகுறித்த முடிவை எடுப்பதற்கான வசதியையும் அளிக்க இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டமானது நீண்டகாலமாக முடக்கப்பட்ட சூழலில், இதனை மீண்டும் தொடங்கலாமா எனும் கருத்தில் பல முரண்பாடுகள் வெளிவருகிறது. இந்த முரண்பாடுகளை அகற்ற அரசாங்கம் சில தீர்வுகளை தயாரித்து உள்ளது. இப்போது புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டுமா (அ) புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடரவேண்டுமா என்பதை ஊழியர்கள் முடிவு செய்யவேண்டும்.