மெட்ரோ ரயிலில் இரண்டு பெண்கள் சண்டைபோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி மெட்ரோவில் 2 பெண்கள் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்வதை வீடியோவில் காண முடிகிறது. இதில் ஒரு பெண் பெப்பர் ஸ்பிரேயை எடுத்து இதனை உன் முகத்தில் அடித்துவிடுவேன் என மற்ற பெண்ணை மிரட்டுகிறார்.

இதனால் வாக்குவாதம் வன்முறையாக மாறுகிறது. பெப்பர் ஸ்பிரே கையில் வைந்த்திருந்த அப்பெண், மற்ற பெண்ணின் முகத்தின் மீது அடிக்கிறார். அதன்பின் மெட்ரோ கோச்சில் உள்ள மற்ற அனைவருக்கும் ஸ்ப்ரே காரணமாக மூச்சு திணறல் ஏற்படுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.