மின்சாரக் கட்டணத்தால் டென்ஷன் ஆகாமல் இருப்பதற்கு புது சாதனம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இச்சாதனம் மின் கட்டணத்தை நொடியில் பாதியாகக் குறைக்கும். அதாவது, எஸ்ஆர் போர்ட்டபிள்ஸ் சோலார் ஜெனரேட்டர் எனும் சூரிய சக்தி ஜெனரேட்டரை கொண்டு வந்துள்ளது. இந்த சோலார் ஜெனரேட்டரின் உதவியுடன் உங்களது வீட்டின் மின் விசிறி, டிவி மற்றும் பிற சாதனங்களையும் இயக்கலாம். இது மிக சிறிய அளவில் இருக்கும்.

மேலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஈஸியாக எடுத்துச்செல்ல முடியும். அதோடு இந்த சாதனம் பவர் பேக்அப்பை வழங்கும் திறன்கொண்டது. இதனை வீட்டில் மின்தடை ஏற்பட்டால் பயன்படுத்தலாம். இதன் விலையானது 17,999 ரூபாய் ஆகும். அதை உங்கள் லேப்டாப், ரேடியோ, பவர் பேங்க், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட அனைத்து சிறிய சாதனங்களையும் சார்ஜ் செய்யலாம் (அ) இயக்கலாம். அதேபோன்று அவசர காலத்தில் இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.