உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் whatsapp நிறுவனம் பயனர்கள் எளிதாக வாட்ஸ் அப் கால் செய்வதற்காக புதிய ஷார்ட் கட் அம்சத்தை வழங்க உள்ளது. இதன் மூலமாக இனி வாட்ஸ் அப் கால் செய்வதற்கு செயலியை திறக்க வேண்டியதில்லை. நாம் போன் நம்பரை டைப் செய்த உடனேயே whatsapp கால் ஆப்ஷன் காட்டப்படும். இதற்கு நாம் அடிக்கடி கால் செய்யும் தொடர்பு எண்ணை ஷார்ட்கட் மெனுவில் இணைக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.