மாவீரன் திரைப்படத்திற்கான வசூல் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் போன படம் மிஸ் ஆகிவிட்டதாகவும், இதில் அப்படி ஆகாது என தெரிவித்திருந்தார். அவர் சொன்னதை போலவே, 

படம் வெளியான 11 நாட்களில் ரூ 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக, படக்குழு  அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின்  இரண்டு படங்கள் ரூ100 கோடி கிளப்-ல் இடம்பெற்றிருந்த நிலையில், சிவகார்த்திகேயன் மூன்றாவது 100 கோடி கலெக்ட் செய்த படமாக மாவீரன் கண்டிப்பாக அமையும் என சினிமா துறை விமர்சகர்கள் மற்றும் வல்லுனர்களால்  கணிக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.