மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து ஜனவரி மாதம் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையானது ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளத்தில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது. புதிய நிதி ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி துவங்குவதற்கு முன்பு இருந்தே ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஏற்படப்போகும் திருத்தம் குறித்து பேச்சுக்கள் எழுந்து வந்தது. இந்த புது நிதி ஆண்டில் பல துறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், நடப்பு ஆண்டில் சம்பள கமிஷனை ஒழித்து புதிய பார்முலாவை நடைமுறைபடுத்தும் நோக்கில் அரசு செயல்படும் என சொல்லப்படுகிறது.

இப்போதுள்ள 2.57 மடங்கு பிட்மென்ட் காரணியை 3 மடங்காக அதிகரிக்கவேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றால் அவர்களின் அடிப்படை சம்பளம் சுமார் ரூ.3000 உயரும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி பிட்மென்ட் காரணி 3.68 மடங்கு இருக்கவேண்டும் என மறுபக்கம் சொல்லப்படுகிறது.

பிட்மென்ட் காரணி இந்த அளவு உயர்ந்தால் ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது சுமார் ரூ.8000 வரை உயரும். இப்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பளமானது ரூ.18,000 ஆக இருக்கிறது. பிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் சம்பளமானது ரூ.26,000 ஆக அதிகரிக்கும். எனினும் பிட்மென்ட் காரணி உயர்வு குறித்து அரசு எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பிட்மென்ட் காரணி அடிப்படையில் 2.57 மடங்கு மற்றும் அடிப்படை சம்பளம் ரூபாய்.18,000 ஆகும். இதர அலவன்ஸ்கள் தவிர ரூ.18,000 X 2.57 = ரூ.46260. அதுவே 3.68 மடங்காக உயர்த்தப்பட்டால் இதர அலவன்ஸ்கள் தவிர ஊழியர்களின் சம்பளம் 26,000 X 3.68 = ரூ 95,680 ஆக இருக்கும்.